பேராதனை தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் (படங்கள் )
பேராதனை பல்கலைக்கழத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட முதலாம் வருட தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று இன்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது என தமிழ்க்கிங்டொத்தின் செய்தியாளர் தகவல் தந்துள்ளார்.

குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட இணை சுகாதார விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை இலக்கு வைத்து 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் இச்சம்பவம் எதேச்சயாக நடைபெறவில்லை என்றும் இதை சிங்கள மாணவர்கள் திட்டமிட்டே செய்திருக்கிறார்கள் எனவும் தெரியவந்திருக்கின்றது.
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மாணவர்கள் மீது யாழ்பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் தொடச்சியாக இதை பார்ப்பதாகவும் இது இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளை வலுப்படுத்தும் போக்காக காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர் .
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்