சிட்னி தமிழர்களின் விழாவில் சிறிலங்கா தூதுவர்! எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!!
ஒஸ்ரேலியாவிலுள்ள சிட்னி பெருநகரத்தில்
தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு சிறிலங்கா தூதுவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்படவிருப்பதனை அந்நாட்டின் பிரதான தமிழர் அமைப்புகள் கண்டித்துள்ளன என தமிழ்கிங்டொத்தின் சிட்யனிசெய்தியாளர்.
தற்போதைய தூதுவர் ஒரு தமிழராக இருக்கின்றபோதும் அவர் தொடர்ந்தும் தமிழர்கள் மேல் தொடர்ந்துவரும் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவராகவே செயற்பட்டுவருகின்றார் என்றும் தாயகமக்களுக்கான நிரந்தரமான சுமுகமான தீர்வு கிடைக்கும்வரை சமூகரீதியான உறவுகளை பேணவேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் கேட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ் அமைப்புக்களால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சிட்னியின் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளி விழா நிகழ்வுக்கு ஒஸ்ரேலியாவிற்கான சிறிலங்கா தூதுவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையை அறிந்து, கவலையும் அதிர்ச்சியும் அடைகின்றோம்.
குறித்த அமைப்பைச் சார்ந்த சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக, அரங்கேற்றப்படும் இத்தகைய நடவடிக்கைகள், எமது தாயக உறவுகளின் அரசியல் செயற்பாடுகளுக்கும், மறுக்கப்பட்ட நீதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும், பெரும் தடையாகவே அமையும்.
இத்தகையை நிகழ்வை புறக்கணிப்பதுடன், அதற்கான எதிர்ப்புக்குரலாக இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு – இத்துடன் சிட்னி தமிழ் மக்கள் சார்பில் வெளியான துண்டுப்பிரசுரத்தின் தமிழ் ஆங்கில பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஒஸ்ரேலியா
தமிழ் இளையோர் அமைப்பு – ஒஸ்ரேலியா
நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் – ஒஸ்ரேலியா