Breaking News

நல்லெண்ணம் கொண்டவர்களே அரசியலுக்கு வர வேண்டும்!



மற்றவர்களை பற்றி சிந்திக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களே அரசியலுக்கு வரவேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான கந்தையா அருந்தவபாலனின் மணி விழா நிகழ்வு நேற்று (புதன்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இரு இனங்களிலும் உள்ள நல்லவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்துவிட்டாலே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என அண்மையில் யாழிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க தூதுவர் தம்மிடம் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட விக்னேஸ்வரன், நாட்டில் வல்லவர்களுக்கு பஞ்சமில்லையென்றும் நல்லவர்களுக்கே பஞ்சமாக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.