காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல்
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைக்கும் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று காலை சம்பந்தப்பட்ட சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டதாக சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் காரணமாக அரசியல் சாசனம் மீறப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
இதன்படி அதற்கு அனுமதி வழங்கப்பட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமென்று கூட்டு எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இந்த பின்னணியில் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.