‘வற்’ வரி அதிகரிப்புக்கு இடைக்கால தடை!
வற் எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அதிகரிப்பிற்கு, உயர்நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) இடைக்கால தடை விதித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பிருமான விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், இவ் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
நூற்றுக்கு 11 வீதமாக இருந்த வற் வரி, கடந்த மே மாதம் 2ஆம் திகதிமுதல் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. இது பாமர மக்களின் வாழக்கைச் செலவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்பட்டு, நாடு தழுவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வற் வரி அதிகரிப்பில் திருத்தத்தை கொண்டுவருவதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி, குறித்த திருத்தம் தொடர்பாக ஆராய குழுவொன்றையும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.