எக்னெலிகொட வழக்கு! புலனாய்வுப் பிரிவிடம் மீள் விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு தொடர்பில் புலனாய்வுப் பிரிவிடம் மீள விசாரணை நடத்த விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஒராண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலையில் மீளவும் இவர்களிடம் விசாரணை நடத்த இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஹோமாகம நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் விளக்கத்திற்கு அமைய, இந்தக் கோரிக்கையை பதில் நீதவான் அபேரட்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த வழக்கு விசாரணை தினத்தின் போது நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு பதில் நீதவான் அறிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் நீண்ட காலம் இருப்பதாகவும் இவர்களை அங்கிருந்து அகற்றி தனித்தனியாக சிறையில் தடுத்து வைக்குமாறு இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் பதில் நீதவான் நிராகரித்துள்ளார்.