ரணிலுக்கு தும்புத்தடியை தூக்கிகாட்டிய நிமல்காவினால் பரபரப்பு!
மைத்திரி மற்றும் ரணிலின் நல்லாட்சி அரசாங்கத்தினை, பியகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிமல்கா கொந்தேவேல தும்புத்தடி காட்டி விமர்ச்சித்தமை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை சுமை அதிகரித்திருப்பதால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசாங்கத்தை தும்புத்தடியால் அடித்து விரட்ட வேணடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்புக்கு கொண்டு வந்திருந்த தும்புத்தடியை உயர்த்திக் காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட தொழில் வாய்ப்பின்றி இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், எப்படி 10 லட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் நிமல்கா கொந்தேவேல தெரிவித்துள்ளார்.