வடக்கு முதல்வர் வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
எனினும், அவருக்கு தொடர் சிகிச்சை அவசியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் யாழிலிருந்து கொழும்பு வந்திருந்த வடக்கு முதல்வர், வடக்கின் பொருளாதார மையம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முன்னைய செய்தி
ஓமந்தையா? தாண்டிக்குளமா? -முதல்வருக்கெதிரான சம்பந்தனின் காய்நகர்த்தல்தொடர்புடைய முன்னைய செய்தி