நாமலின் விடுதலைக்காக நான் முன்வரமாட்டேன் – மஹிந்த
கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்காக நீதிமன்றுக்கோ, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவுக்கோ தான் செல்வதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தனது புதல்வர் என்றாலும் அவர் ஒரு அரசியல் வாதி. கடந்த தினங்களில் அரசியல் வாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்காக நான் நீதிமன்றுக்கோ, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவுக்கோ, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கோ சென்றதில்லை.
அதேபோன்று நாமல் ராஜபக்ஷவுக்காகவும் தான் எங்கும் போகமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.