மஹிந்த, பசிலை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கும் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்க ப்படவுள்ளது.
இலங்கை சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
கட்சியை மீளமைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் முக்கிஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அண்மையில் அஹூன்கலவில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழுவை சந்தித்தப்பின்னரே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.