கம்மன்பில மீண்டும் கைதா?
நாட்டில் இனவாதத்தை தூண்டும் சக்திகளில் உதய கம்மன்பிலவும் ஒருவர். நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அரசுக்கு எதிரானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கம்மன்பில ஒரு இனவாதி. பொய்ப் பிரச்சாரங்களைப் பேசி மக்கள் மனதில் இனவாதத்தை தூண்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு பொய்களைக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரிபவர்கள் அரசாங்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் சரி, எவ்வளவு பெரிய பேரணிகளை நடத்தினாலும் சரி, எம்மை நம்பி வாக்களித்த 68 இலட்சம் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இருப்பதாக எச்சரித்தார்.
அரசுக்கு எதிராக செயற்படும் உதய கம்மன்பில போன்றவர்கள் அரசியல் அநாதைகள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தன்னுடைய சுய இலாபம் கருதி மக்களை ஏமாற்றித் திரியும் இவர்கள் மீது எதிர்காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.