Breaking News

யாழ். பல்கலை மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவு



யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்பு டையதாக கூறப்பட்டு இனங்காணப்பட்ட சந்தேகநபர்கள் சிலர் தற்பொழுது அப்பிரதேசத்தி லிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலையின் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் எவரும் இதுவரையில் ஏன்? கைது செய்யப்படவில்லையென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன்கொண்டுவரப்பட வேண்டும். பொலிஸார் இன்னும் அவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.