யாழ்.பல்கலைக்கழக மோதல்! தமிழ் மாணவர்கள் மூவரைக் கைது செய்ய நடவடிக்கை
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இட ம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் அறிய கிடைப்பதாவது,
குறித்த மோதல் சம்பவத்தை அடுத்து கொழும்பு சென்ற சிங்கள மாணவர்களினால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 3 த மிழ் மாணவர்களை பொலிஸார் கைது செய்ய உள்ளதாக கூறப்ப டுகின்றது.
இதேவேளை யாழ்.பல் கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.