Breaking News

28 இற்கு முன்னர் 7 பேரை கைது செய்ய FCID திட்டம்- கம்மம்பில



கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஏற்பாடு செய்துள்ள நடைபவனிக்கு முன்னர் 7 பேரை கைது செய்வதற்கு பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு தயாராகி வருவதாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்வதற்குத் தேவையான தஸ்தாவேஜுகளை தயார் செய்யும் நடவடிக்கையில் எப்.சி.ஐ.டி. யினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கம்மம்பில மேலும் கூறியுள்ளார்.