உதய கம்மன்பிலவிற்கு வந்த புதிய ஆசை
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்கள் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிட தாம் விரும்புவதாக மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிறைவாசம் அனைத்து வசதிகளையும் கொண்டதாகவே அமைந்திருந்தது. சிறைவாசமானது நிறைய அனுபவத்தினை கற்றுத் தந்துள்ளது. எனவே இந்த அனுபவங்கள் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிட நான் விரும்புகின்றேன்.
மேலும், புதிய மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியின் நம்பகத்தன்மை தொடர்பிலும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவரா என்ற சந்தேகமும் எம்மிடம் காணப்படுகின்றது.
இதேவேளை, மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.