கைது செய்யப்பட்ட பாலித்த தேவரப்பெருமவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை – மீகஹத்தென்ன ஆரம்பப் பாடசாலையில் ஒன்றில் மாணவர்களை பலவந்தமான முறையில் இணைத்துக்கொள்ள முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாதாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.