கூட்டு எதிர்க் கட்சியின் 4 பேர் அரசாங்கத்துடன்?
கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நான்கு பேரும் கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி அரசாங்கத்துக்கு சார்பான வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.