Breaking News

பிள்ளையானுக்கு கிடைத்த தீர்ப்பு



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இன்று மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவரை செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிள்ளையானை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்த கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த விவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.