நாமலினை பிணையில் எடுக்கத்தயார் இல்லை – மஹிந்த (காணொளி இணைப்பு)
நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக தற்போது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், 18 ஆம் திகதி காத்திருப்பதாகவும் அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவை வெலிகடை சிறையில் சென்று சந்தித்து விட்டு, வெளியில் வரும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளே யாரை எப்போது கைது செய்ய போகின்றனர் என்பதை கூறுகின்றனர். இதுதான் மாற்றம்.
இதற்கு மேலான வெற்றி ஒன்றை நாங்கள் பெற்றிருக்கின்றோம். விமல் வீரவன்ஸ பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தற்காலிமாக இடைநிறுத்தியுள்ளது.
அத்துடன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமையானது முழுமையான அரசியல் பழிவாங்கல். இதனை நாங்கள் அறிவோம். முஸம்மில் இன்னும் சிறையில் இருக்கின்றார்.
அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறினாலும் எல்லோருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நாங்கள் காண்கின்றோம் என்றார்.