ஈக்குவடோரில் அடுத்தடுத்து இரு பயங்கர நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈக்குவடோரின் வடமேற்கு பகுதியான குயினிண்ட் மற்றும் முயிஸின் பகுதிகளின் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.9 மற்றும் 6.4 என்ற அளவாக பதிவானது.
கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈக்குவடோரில் 7.8 என்ற பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 660 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.