Breaking News

பேரூந்து கட்டணம் : இன்று இறுதி முடிவு?



வருடாந்த பேரூந்து கட்டண சீர்த்திருத்தம் குறித்து, இன்று (திங்கட்கிழமை) இறுதி முடிவு எட்டப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில், இன்று போக்குவரத்து அமைச்சுக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள நிலையில், இத் தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சீர்திருத்தம் செய்யப்படும் கட்டண விபரம், நாளைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பேரூந்து கட்டண சீர்திருத்தம் தொடர்பில், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டினால் அது கைவிடப்பட்டது. அத்துடன், ஜனாதிபதியுடன் இரு தடவைகள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கலந்துரையாடல் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.