Breaking News

சவால் விடுக்கும் கம்மன்பில! சாதிக்குமா அரசாங்கம்?

இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா என்ற பொருளதார உடன்படிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திப்பார்க்கட்டும் என சவால் விடுக்கப்ப ட்டுள்ளது.


பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு சவால் விடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுமக்களின் ஆதரவில்லாமல் எட்கா உடன்படிக்கையை அரசாங்கம் செய்துக்கொள்வதை ஏற்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

இந்த உடன்படிக்கை நாட்டின் சுதந்திரத்துக்கு பாதகமான செயலாகவே இருக்கும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில முதுமொழி ஒன்றின் அடிப்படையில் Do not catch anything that you cannot throw away’ என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களிடம் இருந்து விடுபடமுடியாது என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.