Breaking News

வெட்கத்துக்குரியதாகி போன மஹிந்தவின் நிலை!



கூட்டு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையானது தலைவன் இல்லாத நாடோடிக் கூட்டம்போ லாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொடிகாவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கூட்டு எதிர்கட்சியினர் நாடு பூராகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும், வட் வரியினை சாதாரண வர்த்தகர்களிடம் ஆரம்பித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எனவும் அவர் கூறியுள்ளார்.

வட் வரியினை காரணம் காட்டி அரசியல் செய்வதற்கு இவர்கள் முயற்சிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த கால ஆட்சியில் பெற்றுக்கொள்ளபட்ட 10 ஆயிரத்து 500 பில்லியன் கடனை செலுத்துவதாலேயே பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள், கடந்த பின்னர் கடன் இல்லாத அபிவிருத்தி மற்றும் சுபீட்சம் நிறைந்த நாடாக இலங்கை உருவாகும்,இவ்வாறான நிலையில், நிழல் அமைச்சரவையை தோற்றுவிக்க முடியாது போகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு நாட்டிலும் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நிழல் அமைச்சரவையின்பிரதமராக இருந்ததில்லை.மஹிந்தவின் நிலையை பார்த்தால் வெட்கமாகவும், விளையாட்டுத்தனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிழல் அமைச்சரவையில் பிரதமராகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். நிழல் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டு 3 நாட்களில் மூவர் பதவி விலகியுள்ளனர்.

இதனாலேயே தலைவர் இல்லாத நாடோடிக் கூட்டம் போல் நிழல் அமைச்சரவை மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.