யானைக்கால் நோயற்ற நாடாக இலங்கை பிரகடனம்
இதற்கான சான்றிதழ், உலக சுகாதார ஸ்தாபனத்தால் இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பூனம் கேத்ரபால் சிங்கினால், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இச்சான்றிதழ் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த சான்றிதழை மாலைதீவு பெற்றுள்ள நிலையில், இச் சான்றிதழை பெறும் இரண்டாவது பெருமைக்குறிய நாடாக இலங்கை கருதப்படுகிறது.
உலகளாவிய ரீதியில், 71 நாடுகளிலுள்ள 120 மில்லியன் மக்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 50 வீதமானவர்கள் தென்கிழக்காசிய நாடுகளிலேயே வசிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.