Breaking News

தமிழர்களை மிரட்டும் வடக்கு ஆளுநர்!



தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளவதற்காக சர்வதேச சமூகத்தை நாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்துகின்றார்.

யுத்தக் குற்றங்கள் உட்பட போரின் போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் தரப்பில் தொடச்சியாக வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இங்கேயே தீர்வுகாணப்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.

வரும் போது தன்னை நல்லவர் என கூறி பதவியேற்ற ஆளுநர் ரெஜினோல்ட் குரே தற்போது தமிழர்களை மிரட்டும் வகையிலும் குழப்பும் வகையிலும் தீவிரமாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.