Breaking News

அரசுக்கு எதிரான பாதயாத்திரை – கண்டியில் பசில் இரகசியக் கூட்டம்



இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் எதிர்வரும் 28ஆம் நாள் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, இலங்கையின்  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லோகான் ரத்வத்தையின் மகியாவ வதிவிடத்தில் இந்த இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாதயாத்திரையில் அதிகளவானோர் பங்கேற்பதை உள்ளூர் அரசியல்வாதிகள், உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், பசில் ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய மாகாணசபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. வீரசிங்க அளுத்கமகே உள்ளிட்ட சில மாகாணசபை உறுப்பினர்களே பங்கேற்றனர்.

அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணவீர, கெஹலிய ரம்புக்வெல, திலும் அமுனுகம, லோகான் ரத்வத்த உள்ளிட்டவர்கள் இந்த இரகசியக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.