கண்டி மடுல்கலை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் காயம்
காயமடைந்தவர்கள் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என மடுல்கலை வைத்தியசாலையின் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கபரகலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மடுல்கலை பகுதியில் வீதியைவிட்டு விலகி மண்சுவரில் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது