புதிய அதிபர்களுக்கு பாடசாலை வேண்டி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அதிபர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிபர்களுக்கு பாடசாலைகளை வழங்குமாறு வேண்டி இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று எதிர்ப்பு நடைபவனியொன்றை நடாத்தவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு விகாரமகா தேவி பூங்காவிலிருந்து இந்த நடைபவனி ஆரம்பமாகவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3859 அதிபர்களும் கலந்துகொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய அதிபர்களுக்கு பாடசாலைகளை வழங்காமல், தற்பொழுது பாடசாலைகளில் அதிபர் தரத்தில் இல்லாது பதில் அதிபர்களாக உள்ளவர்களை அதிபர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது சட்ட முரணானது எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.