மஹிந்தவின் பதவி சமல் ராஜபக்ஷவுக்கு
தனக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமை பதவியை பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு எந்த நேரத்திலும் வழங்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சு பதவி வழங்கவும் அரசு தயாராக உள்ளது என தெரிவித்த அவர் அதற்கு அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.
சமல் ராஜபக்ஷவை நீக்கி தான் அபிவிருத்திக்குழு தலைமை பதவியை பெற்றுக்கொண்டதாக ஒருசிலர் தெரிவிப்பதாகவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.