Breaking News

விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே அடுத்த நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கி டையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,

இந்த மோதல்கள் தொடர்பாக விசாரிக்க யாழ்.பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு, பொறியியல் பீட சபை உறுப்பினரும், இலங்கை மின்சார சபையின் பிரதி பணிப்பாளருமான குணதிலக தலைமை தாங்குகிறார்.

மகளிர்மருத்துவத்துறை தலைவர் மருத்துவ கலாநிதி முகுந்தன், மருந்தியல்துறை தலைவர் மருத்துவ கலாநிதி நவரட்ணராஜா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.