Breaking News

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கூட்டம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள், முப்படைகளினதும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில்  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்,- முன்னெடுக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.