Breaking News

யாழ்.கடற்பரப்பில் மீன்பிடித்த 17 இந்திய மீனவர்கள் கைது!



இலங்கை, கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் – பருத்துத்துறை கடற்பரப்பில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்ப டவுள்ளனர்.