சிறையில் யோகா கற்பிக்கின்றாராம் நாமல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, சிறைக்கைதிகளுக்கு யோகா கற்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாமல் ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரும் நாமல் ராஜபக்சவின் தாயாருமான சிரந்தி ராஜபக்ச, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் இதன்போது மகனைப் பார்த்த சிரந்தி ராஜபக்ச கண்ணீர்விட்டு அழுததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.