தமிழரசுக் கட்சியின் கௌரவிப்பு நிகழ்வு! (படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முதலாம் வருட நிகழ்வும், சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துசிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி சாதனைகள் பல படைத்த மாணவர்கள் பதக்கங்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.