எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் : வாசுதேவ
இலங்கையின் ஒற்றையாட்சியை கைவிடுவது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பும் இணகக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில் எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் எனக் கேள்வியெழுப்பும் மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார,
இந்தியாவை மீறி புலம்பெயர் அமைப்புக்களின் தேவையை நிறைவேற்ற கூட்டமைப்பு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியது. இதற்காகவே இன்று அரசாங்கத்திற்கு சம்பந்தன் ஆதரவு வழங்குகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.