மைத்திரி,மங்கள விட்ட பிழைகளை கண்டுபிடித்தார் சுமந்திரன் ...!!
2018ற்கு முன்பே 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் வடக்கு கிழக்கில் விடப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவில் தெரிவித்திருப்பது ஜனாதிபதி யாழில் வலி வடக்கு மக்களிற்கு தெரிவித்த கருத்திற்கு முரணான முடிவு என என்னத் தோன்றுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் நல்லாட்சி அரசிற்கான பங்காளர்களாக தமிழ் மக்கள் வாக்களித்தது தமது அடிப்படை வாழ்க்கைப் பிரச்சணைகளிற்கு உடன் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே வாக்களித்தனர்.
இதன் பிரகாரம் தமது சொந்த இடங்களில் மீள் குடியமர பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இதில் யாழில் வலி. வடக்கில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலச் சொந்தக்காரர்கள் இன்றும் 32 முகாம்களில் தவிக்கின்றனர்.
இவர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்த அனைவரும் முயன்று வரும் நிலையில் ஜனாதிபதி கடந்த ஆண்டு இறுதியில் யாழில் வைத்து ஓர் உறுதிமொழியை அளித்திருந்தார் இப் பகுதி மக்களை 6 மாதகாலத்தில் சொந்த இடத்தில் குடியமர்துவதாக கூறினார்.
இதனை நம்பி ஆறு மாதம் கடந்து விட்ட பின்பும் மக்கள் காத்திருக்கும் நிலையில் மங்களவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதாவது இந்த வாரம் 700 ஏக்கர் விடப்படும் எனவும் 2018ற்கு முன்பு மேலும் 4 ஆயிரம் ஏக்கர் விடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்ற அறிவிப்பு தமிழ் மக்களை கவலை கொள்ள வைக்கும் ஓர் அறிவிப்பு இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதியினைச் சந்தித்து உரையாடவுள்ளோம். என்றார்.