Breaking News

தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் நல்லாட்சியில் குறைவு ; சம்பந்தன்



கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தற்போதைய நல்லாட்சியில் இடம் பெறுவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் வடக்கு கிழக்கில் ஒரு சில விடுவிக்கப்பட்ட போதிலும் எஞ்சியுள்ளவை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழ்மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் மற்றும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முழு நாள் விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வன்முறைகளுக்கு இனி மேல் மக்கள் மத்தியில் இடமில்லையெனவும் வன்முறையை முழுமையாக நிராகரிப்பதாகவும் எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முடியாது எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.



மேலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.