கொஸ்கம விவகாரம் : பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவம் தொடர்பில், இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்புச் சபை கூடிய ஆராய்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இன்று காலை பாதுகாப்புச் சபை கூடியதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்போது கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் குறித்து பின்னர் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என, பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து, இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. சம்பவத்தில் ஒரு இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ள அதேவேளை, சுமார் 47 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.