ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது:கஜேந்திரகுமார்
பொறுப்புக்கூறும் பொறிமுறை உள்ளிட்ட ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றும் பல்வேறு விடயங்களில் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டுவரும் சிறிலங்கா நடவடிக்கைகளில், ஐ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் நம்பிக்கைகொள்ளும் வகையில் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைனின் அறிக்கை அமைந்திருப்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.
நேற்று மாலை ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் தனது வாய்மொழி மூலமான அறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் ஜெனீவாவில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.