Breaking News

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய மூன்று உபகுழுக்கள் ஆரம்பம்

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவை தனது முக்கிய மூன்று உபகுழுக்களை ஆரம்பித்துவைத்து அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது.


இச்செய்தியாளர் மாநாட்டில், கலை கலாசாரத்திற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்), அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்) மற்றும் திரு. T வசந்தராஜா ஆகியோரும், சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய பேராசிரியர் சிவநாதன் (யாழ். பல்கலைக்கழகம்), பேராசிரியர் அமிர்தலிங்கம் (கொழும்பு பல்கலைக்கழகம்) மற்றும் வைத்திய நிபுணர் கருணாகரன் (பதில் துணைவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரும், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு சார்பான விளக்கத்தினை சட்டத்தரணி காண்டீபனும் அளித்தனர்.

கலை கலாசாரத்திற்கான உபகுழு

உபகுழு இணைப்பாளர்கள்:-
1. ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்)
2. அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்)
3. திரு. T வசந்தராஜா
4. வைத்திய நிபுணர் பிரேமகிருஷ்ணா

உபகுழு உறுப்பினர்கள்:-

சமூகத்தின் கலை கலாசாரம் சார்ந்த ஆர்வமுள்ள மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சமய மற்றும் சமூக பெரியார்கள் அடங்கிய வடக்கு கிழக்கு தழுவிய 22 அங்கத்தவர்களைக் கொண்ட உபகுழு.

நோக்கம்:-

தமிழர் தாயகமாகிய வடக்கு, கிழக்கில் இன்று திட்டமிட்டு நடைபெறும் இன அழிப்பின் ஒரு வடிவமாகிய கலாசார சீரழிவுகளைத்தடுத்தல், மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை பேணிப்பாதுகாத்தலும், அவற்றை மேலும் வளர்த்தலும்.

எமது செயற்திட்டங்களிற்காக அடையாளங்காணப்பட்ட துறைகள் மற்றும் பிரிவுகள்:-

1. கலாச்சாரச் சீரழிவுகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்களிற்கான பிரிவு
2. நடனத்துறை
3. நாடகத்துறை
4. இலக்கியத்துறை
5. இசைத்துறை
6. ஓவியத்துறை
7. புகைப்படத்துறை
8. திரைக்கலைத்துறை
9. நாட்டார் கலை

செயற்பாட்டு முறை:-

ஒவ்வோர் துறைக்குமான ஒரு இணைப்பாளர் தெரிவு செய்யப்பட்டு அத்துறை சார்ந்த நிபுணர்கள் உள்வாங்கப்பட்டு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இத்துறைகளுக்கான இணைப்பாளர்களும் மேற்குறிப்பிட்ட 22 பேர் கொண்ட உபகுழுவில் அடங்குவர்.

எம்மால் இனங்காணப்பட்ட துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக எமது கலை கலாச்சாரத்திற்கான உபகுழுவுடன் +94 710145723 அல்லது +94 756993212 என்ற தொலைபேசி இலக்கங்களூடாகவோ அல்லது kalaachchaaram@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு அத்துறைகளையும் செயற்படுத்த இணைந்து கொள்ளலாம்.

மேலும் இத்துறைகளில் பங்களிக்கவிரும்பும் தாயகம் மற்றும் புலம்பெயர் அன்பர்கள் மேற்குறிப்பிட்ட தொடர்புகளினூடாக இணைந்து கொள்ளலாம்.

நன்றி 
இணைப்பாளர்
கலை கலாச்சாரத்திற்கான உபகுழு
தமிழ் மக்கள் பேரவை