ஜனாதிபதிக்கு சீனா விஷேட அழைப்பு
இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து சீனாவுடனான பொருளாதார உறவும், அரசியல் உறவும் முற்றாக பாதிப்பட்டுள்ளதாக எதிர் தரப்பினர் பல விமர்சங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
மேலும் எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 25 வீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு செலவாகின்றது. இந்த நிலை நீடிக்காதிருக்க தற்போது எமக்கு கிடைத்துள்ள சீனா உள்ளிட்ட நாடுகளின் உறவை வலுப்படுத்திக்கொள்வதே சிறந்தது என்றார்.