விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்த முயற்சி
காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன காரியாலயம் அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் கலந்துரை யாடல்களை மேற்கொள்ளவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.
இந்த காரியாலயம் அமைப்பது தமிழ் மக்களுடைய தேவை எனவும் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இந்த பணிமனையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்காவில் காணாமல்போனோர் தொடர்பான சுயாதீன காரியாலயம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களுக்கு தகவலை கொடுக்க மாத்திரமே ஸ்ரீலங்காவில் காணாமல்போனோர் தொடர்பான சுயாதீன காரியாலயம் அமைக்கப்படவுள்ளதே தவிர நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக அல்லவெனவும் அருட்தந்தை சத்திவேல் மேலும் தெரிவித்தார்