ஊடகவியலாளர் மீதான தாக்குதல் : இருவர் கைது
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் மீபுர இணையத்தளத்தின் ஆசிரியருமான பிரடி கமகே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரடி கமகே, நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகல் நீர்கொழும்பு மாநகர சபையின் இம்மாத அமர்வை செய்தி சேகரித்துவிட்டு தனது காரில் ஏற முற்பட்ட வேளையில் முழுமையாக தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் தடிகளால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.