Breaking News

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகவும், இதனால் தடையை நீடிப்பதாகவும், அமெரிக்க அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதியமைப்பு செயற்பட்டு வருவதாகவும், இதனால் தடையை நீடிக்கப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை பயன்படுத்தி வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் ஆயதங்களை கொள்வனவு செய்யவும், நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.