Breaking News

நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரும் கம்மன்பிலவின் மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான, உதய கம்மன்பில, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


அவுஸ்ரேலிய வர்த்தகரின் 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை 1ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்குமாறு, தனது சட்டவாளர் மூலம் உதய கம்மன்பில நேற்று கோட்டே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால், நீதிச்சேவை ஆணைக்குழு அண்மையில் விடுத்துள்ள சுற்றறிக்கையின் படி, இத்தகைய உத்தரவைத் தம்மால் பிறப்பிக்க முடியாது என்று கூறி, நீதிவான் லங்கா ஜெயலத்ன, இந்த மனுவை நிராகரித்துள்ளார்.