Breaking News

புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – பிரதமர்



புதிய அரசியலமைப்பு அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் அறியும் குழுவின் அறிக்கை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த விடயம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.அரசியல் கட்சிகளின் எழுத்து மூல ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு இந்த அறிக்கை ஜூலை மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.