அரசாங்கத்துடனான நேற்றிரவு பேச்சுவார்த்தை வெற்றி- அரச வைத்தியர்கள் சங்கம்
அரச வைத்தியர்களின் நியமனம் வழங்கும் விடயம் தொடர்பில் அரச வைத்தியர்கள் சங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நேற்றிரவு (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் செயலாளர் டாக்டர் நலின்ந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரச வைத்தியர்கள் நியமனப் பட்டியல் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் டாக்டர் நலின்ந்த தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அடையாள வேலைநிறுத்தமொன்றை இதற்காக அரச வைத்தியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.