30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடற்புலித் தளபதிக்கு கனடா புகலிடம்
அடங்கிய மூன்று கப்பல்களை எடுத்து வந்தமை தொடர்பில் 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் பிரதானி சங்கிலி என அழைக்கப்படும் ரவி சங்கர் கணகராஜா என்பவருக்கு கனடா அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நீதிமன்றத்தினால் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச பொலிஸாரும் இவருக்கு சிவப்புப் பிடியாணை விதித்திருந்த போதிலும் கனேடியப் பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாது இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட கணகராஜாவை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலிஸின் சர்வதேச பிரிவு கனடா அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.