Breaking News

இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் இவ்வாண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர்

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் இவ்வாண்டின் இறுதிக்கும் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது.


விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களும் அவர்களது காணிகள் மீளக் கையளிக்கப்படும் என தேசிய பேச்சுவார்த்தைகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையில் காணிகளை மீளக் கையளித்தல் செயற்பாட்டிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 1980 களில் சிங்கள மக்கள் தமது காணிகளை விட்டுச் சென்றதுடன், 1990 ஆம் ஆண்டுகளில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு சொந்தமான சில நிலங்களை மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் விடுவித்திருந்தது.