புதிய கட்சி உருவாக்கும் எண்ணமில்லை: மஹிந்த
புதிதாக கட்சி ஒன்றினை உருவாக்கும் திட்டம் தம்மிடம் இல்லையென முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக கட்சி உருவாக்கும் எண்ணமில்லை. என்ன நடக்க போகின்றது என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப்போவதாக தெரிவிக்கப்படும் கருத்தக்களில் எவ்வித உண்மையும் இல்லை. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் இணையமாட்டார்கள்.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுவது, முற்றிலும் அரசியல் பழிவாங்கலாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.